
நாய்களின் விசுவாசம், பாசம், நன்றி உணர்வு போன்றவற்றை நிரூபிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சமீபத்தில், செல்லப்பிராணிகளின் அன்பை வெளிப்படுத்தும் விதமான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் கிளினிக்கில் நாய்களின் அருகில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு நாயின் மீது மிதித்து தவறி கீழே விழுந்தார். இதனால், அருகில் இருந்த நாய்கள் அதிர்ச்சி அடைந்து, பெண் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்காக அவரை சூழ்ந்துகொண்டன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்வித்துள்ளது. “நாய்களின் உண்மையான அன்பை இதைவிட வேறு எதனால் நிரூபிக்க முடியும்?” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும், நாய்களின் எளிமையான அன்பும், உரிமையாளர்களோடு உள்ள அதீத நெருக்கமும் இந்த வீடியோ மூலம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.
The dogs were so worried.. 🥺 pic.twitter.com/krgqs2gTxo
— Buitengebieden (@buitengebieden) March 14, 2025