
சென்னையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே கட்டப்பட இருக்கும் புதிய ரயில் நிலையம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நடை மேடைகளைக் கொண்ட 12 ரயில் பெட்டிகள் நிற்கும் வசதியுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து மேம்பாலம் மூலமாக மக்கள் எளிதில் எந்த சிரமமும் இல்லாமல் பேருந்து நிலையத்திற்கு செல்லலாம்.
ஒருவேளை மேம்பாலம் நடைமேடையில் கரை இறங்குவதற்கான வடிவமைப்பு இல்லாவிட்டால் அதற்கு ஏற்ப நடைமேடைகளை மாற்றி அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பயணிகள் வரை கையாளும் வகையில் ரயில் நிலையம் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 40 லட்சத்தை ரயில்வே துறைக்கு ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில் தற்போது பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.