சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என சொல்லி கிளம்பி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற வீடியோக்கள் உண்மையில்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால், தமிழகத்தில் ஹோட்டல் தொழிலே முடங்கும் அபாயம் உள்ளதாக சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தளத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஹோட்டல், கட்டுமானம் என எந்த துறை எடுத்தாலும் அதில் பாதி பேர் அவர்கள் தான். பொய்யான தகவலால் எனது ஹோட்டலில் இருந்த கூட 10 பேர் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்’ என குறிப்பிட்டார்.