இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் கிரெடிட் கார்டு பெற்றுவிட்டு அதனை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவதால் சில அபாயங்களை சந்திக்கின்றனர். அதாவது நீண்ட காலமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவில்லை என்றால் தானாகவே டீஆக்டிவேட் ஆகிவிடும். இதனால் உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.

அதேசமயம் கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் இருக்கும்போது CUR மதிப்பெண் தானாக குறைவதால் எதிர்காலத்தில் லோன் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம். அதே சமயம் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கார்டு உபயோகிக்கப்படாமல் இருந்தால் கிரெடிட் கார்டு வழங்குனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும். எனவே இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்க அடிக்கடி சிறிய செலவுகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்கள்.