இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அமேசான் மற்றும் flipkartகளில் தீபாவளி ஷாப்பிங் பொதுமக்கள் ஆர்வமுடன் செய்து வரும் நிலையில் இந்த நிறுவனங்களின் பெயரில் மோசடி நடைபெறுவதாக cloud SEK என்ற சைபர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 828 போலி தளங்கள் கண்டறியப்பட்டதாகவும் அதனால் அதிகாரப்பூர்வமான அமேசான் மற்றும் பிலிப்கார்டு பக்கங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது