பயண நேரம் குறைவு, பாதுகாப்பு மற்றும் தூய்மை போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளதால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கார்பன் குறைப்பு நடவடிக்கைக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தங்க பதக்கத்தை வென்றுள்ளது. லண்டனில் உள்ள பசுமை அமைப்பு சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான கிரீன் ஆப்பிள் விருதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.