சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி சமீபத்தில் ஆந்திர மாநிலம் நந்தியாலயா என்ற மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெத்தஞ்சேர்லா நகரில் உள்ள சஞ்சீவநகர் காலனியைச் சேர்ந்த மகேந்திரா என்ற 22 வயதுமிக்க இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.