இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை எடுத்தபோது, மைதானத்தில் அவர் செய்த அநாகரிகமான கொண்டாட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் சேவியர் பார்ட்லெட் வீசிய மெதுவான பந்தைச் சிக்ஸருக்கு அனுப்ப முயன்றபோது, மிட்-விக்கெட் திசையில் பவுண்டரி அருகே ஓடி வந்த டிம் டேவிட், பந்தைத் திறமையாகக் கேட்ச் பிடித்தார். இந்த முக்கியமான விக்கெட்டைக் கொண்டாடும்போது, டிம் டேவிட், கூட்டத்தின் முன்னிலையில் அநாகரிகமான ஒரு சைகையில் ஈடுபட்டார்.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) November 6, 2025
“>
அதாவது, அவர் பந்தை நக்கிக் காட்டுவது போல் சைகை செய்தார். சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், டிம் டேவிட்டின் இந்த அருவருப்பான செயல், விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
What’s going on here Tim? 😂 #AUSvIND pic.twitter.com/3L7hx8AWK3
— cricket.com.au (@cricketcomau) November 6, 2025
“>
