தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது காவல் துறையில் மிகப்பெரிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

இனி தமிழகத்தில் உள்ள எந்தக் காவல் நிலையத்திற்கு யார் புகார் அளிக்க வந்தாலும், அந்தப் புகார் அளிக்கும் நிகழ்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு செயல்படும் இந்த அரசு, போதைப்பொருள் விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

மேலும், அரசு அலுவலகங்களில் தவெக கட்சியினரின் தலையீடு எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது எனத் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ள அமைச்சர், முறைகேடுகளுக்கு இடமளிக்காத ஒரு தூய்மையான நிர்வாகத்தை வழங்க முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.