தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர  ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 30-ம் தேதி மாலை முடிவடைகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயல் நாட்டிற்கான இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை அறிய பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.