2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு  காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிற்றுண்டி வகைகளின் உணவு வகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள்-காய்கறி சாம்பாருடன், ரவா/ அரிசி/கோதுமை ரவை உப்புமா. செவ்வாய்-சாம்பாருடன் ரவா/ சேமியா/சோள/கோதுமை ரவை கிச்சடி. புதன்-சாம்பாருடன் ரவா/வெண் பொங்கல். வியாழன்-சாம்பாருடன் சேமியா/ அரிசி/ரவா உப்புமா.வெள்ளி-சாம்பாருடன் சேமியா/சோள/ரவா கிச்சடி உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும்.