புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சாய் சரவணன், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகினார்.

அதிருப்தியில் இருந்த அவர் இன்று அதிரடியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இணைந்த முதல் நாளிலேயே அவருக்கு திருபுவனை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியில் சேர்ந்த உடனே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்தச் சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.