தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை படித்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்குகிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் 10 நிமிடங்கள் பேசுவார் .அதன் பிறகு மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விஜய் காலை 6:30 மணிக்கே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார். அவர் அதிகாலையில் அங்கு சென்றதற்கு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் முன்பாகவே சென்றுள்ளாராம். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில் 96.44 சதவீதம் மாணவர்கள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.