இலங்கையின் எல்லா – வெல்லவாய பிரதான சாலையில் இன்று நடந்த பயங்கர விபத்தில் ஒரு சுற்றுலா பேருந்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் 9 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நேரத்தில், தங்காலை நகராட்சியில் பணியாற்றும் சுமார் 30 ஊழியர்கள் எல்லா பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து வீடு திரும்பும் வழியில், அவர்கள்  செய்த பேருந்து, எதிரே வந்த ஜீப்பில் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. இதனால், பேருந்து பள்ளத்தாக்கில் தலைகீழாக விழுந்து சிதறியது. பல பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

“>

 

பேருந்தில் மோதிய ஜீப்பா? அல்லது வண்டி பழுது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விலக முடியாத துயர சம்பவம், இலங்கையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

“>