தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் இன்று (நவ. 19) அதிகாலை நடந்த கோர விபத்தில் இளம் பயிற்சி மருத்துவர்கள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்த நிலையில், படுகாயமடைந்த மேலும் இருவர்—கிருத்திகுமார், சரண்—உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மூவரும் பயிற்சி மருத்துவர்கள் என்பதால், மருத்துவ உலகம் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
