பா.ஜ.க.வைச் சேர்ந்த மேற்கு டெல்லி மதியாலா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கெலாட் (60) இன்று காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் திரண்டனர்.

டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா, மேற்கு டெல்லி எம்.பி. கமல்ஜீத் ஷெராவத், டெல்லி அரசின் அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்ட பலர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பா.ஜ.க.வின் கொள்கைகள் மற்றும் தேசியவாதத்தை மேற்கு டெல்லியில் பரப்புவதில் கெலாட் முக்கிய பங்காற்றியதோடு, துவாரகாவில் மிகப்பெரிய ராமலீலா நிகழ்ச்சியைத் தொடங்கியவர் ஆவார். அந்நிகழ்வில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு இன்று  நவாடா பகுதியில் நடைபெறும் என டெல்லி பா.ஜ.க. அறிவித்துள்ளது.