மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.