அதிமுக கட்சியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதால் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் தங்களையும் கட்சியிலிருந்து நீக்குமாறு கடிதம் எழுதி அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு அதிமுக கட்சியிலிருந்து விலகியுள்ளனர். மேலும் கோபிசெட்டிபாளையத்திலும் 300 நிர்வாகிகள் தனித்தனியாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள நிலையில் தற்போது 2000 நிர்வாகிகள் கூண்டோடு கட்சியிலிருந்து விலகியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
