பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், காலம் வரும் வரை காத்திருப்போம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே போல சவுக்கு சங்கரின் நேர்காணல் வீடியோவை தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பியதாக ரெட் பிக்ஸ் நிறுவன உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.