மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முழுவதும் அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கார் ரேசிங் பயிற்சிகளுக்காகவும் தனது பந்தயக் குழுவின் பணிகளுக்காகவும் துபாயில் தங்கியிருக்கும் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற கவலை அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நடிகர் அஜித் துபாயில் மிகவும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாகத் துபாயில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அஜித் தங்கியிருக்கும் இடத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தற்போது துபாயில் எந்தப் பகுதியில் தங்கியுள்ளார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
