
சென்னை பிரபல தனியார் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவநாளன்று மாணவர்கள் விடுமுறை நாட்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருத்தணியை அடுத்த ராமஞ்சேரி என்னும் பகுதியில் கார் வந்து கொண்டிருந்து. அப்போது எதிர்பாராத விதத்தில் கார் திடீரென எதிரே வந்த லாரியின் மீது மோதியது.
இதில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் படுகாயமடைந்த 2 மாணவர்களை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.