
தஞ்சாவூரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.