திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் நாளான இன்று தீபத்திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.

இதனை நேரில் பார்க்க பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவதால் இந்த வருடம் கார்த்திகை தீப திருவிழாவின்போது 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார். அதேசமயம் அனுமதிச்சீட்டு பெற்றிருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படும் எனவும் தீபத்திருவிழா அன்று அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் இருந்து நிகழ்ச்சியை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.