
சென்னை உள்பட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். கோடை வெயிலால் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பீன்ஸ் ₹200 -₹230க்கும், பச்சை மிளகாய் ₹70க்கும், அவரைக்காய் ₹90 ₹110க்கும், கேரட் ₹50 – ₹70க்கும், பூண்டு ₹250க்கும், சேனைக்கிழங்கு ₹70க்கும், சின்ன வெங்காயம் ₹62க்கும். தேங்காய் ₹35க்கும், இஞ்சி ₹130க்கும் விற்பனையாகிறது.