இன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. சிறிய சிறிய நோய்களுக்கு கூட நாம் மருந்தை தான் தேடுகிறோம். இந்த நிலையில் மருந்து இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் காயம் தானாகவே குணமாகும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு மற்றும் ஃடப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆந்த்ரோபாட்ஸ் எனப்படும் மைக்ரோ ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர். மனித உயிரணுக்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த பாட்கள், சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டவை. இவை எதிர்காலத்தில் பல நோய்களை குணப்படுத்த உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.