ஆந்திர மாநிலத்தில் உள்ள கம்பம் பகுதியில் லட்சுமிதேவி (57) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷியாம் பிரசாத் என்ற 35 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அவர் தன்னுடைய தாய் வழியை சேர்ந்த அத்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விஷயம் லட்சுமிதேவிக்கு தெரிய வந்த நிலையில் தன் மகனின் மீது மிகுந்த கோபம் அடைந்தார். இதனால் தன் மகனை அவர் கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 13ஆம் தேதி கோடாரியால் தன் மகனை வெட்டி கொலை செய்த லட்சுமி பின்னர் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி தனித்தனி சாக்கு பைகளில் கட்டி அந்த பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் வீசிவிட்டார். இந்த சம்பவத்திற்கு லட்சுமிதேவியின் உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் கால்வாயில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும்  தலைமறைவாக இருக்கும் லட்சுமி தேவி மற்றும் அவருடைய உறவினர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.