மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி தொடர்பான முழுமையாக படிக்கும் விதமாக காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும் காந்திய கல்வி பட்டய படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய படிப்பு, சம உரையாடல், யோகா பட்டய படிப்பு மற்றும் கல்வி பட்டய படிப்பு போன்ற படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும். அதே சமயம் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் கல்வி முதுநிலை பட்டய படிப்பு யோகா மற்றும் முதல்நிலை பட்டய படிப்பில் சேர முடியும்.

இந்த படிப்பில் காந்தியடிகள் குறித்து காந்தியடிகள் அகிம்சை குறித்தும் ஒருவன் வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். வாரத்தில் சனிக்கிழமை மட்டும் காலையில் பட்டய படிப்புக்கான வகுப்புகளும் மாலை நேரத்தில் முதல்நிலை பட்டய படிப்புக்கான வகுப்புகளும் நடைபெறும். இந்த படிப்புக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9995123091 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.