
கடந்த 2002 ஆம் வருடம் ரிஷப் செட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு காந்தாரா சாப்டர் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் சமீப காலமாகவே இல்லாமல் இருப்பதால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் என்று வதந்திகள் பரவி வந்தது.
View this post on Instagram
இந்த நிலையில் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தவும், ரிலீஸ் பற்றிய வதந்தியை நிராகரிக்கும் விதமாகவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காந்தாரா சாப்டர்-1 தள்ளிப் போகிறதா? என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு இல்லை என்று பதில் உள்ளது. இதன் மூலமாக இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.