ஜார்கண்ட் மாநிலத்தில் நரேஷ் பெங்ரா என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் 24 வயதுடைய கங்கி குமாரி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் லிவிங் உறவில் இருந்த நிலையில் நரேஷ் தன் காதலிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மனைவியை ஜார்கண்டில் விட்டுவிட்டு நரேஷ் தன் காதலியுடன் தமிழகத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரும் அங்கு உறவில் இருந்த நிலையில் பின்னர் இருவரும் ஜார்கண்ட் திரும்பிய நிலையில் கங்கி தன் காதலனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் நரேஷ் கடந்த 8-ம் தேதி தன் காதலியை கொலை செய்து உடலை 40 துண்டுகளாக வெட்டி ஒரு வனப்பகுதியில் வீசிவிட்டான். இந்த வாலிபர் கசாப்பு கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் காதலியை 40 துண்டுகளாக வெட்டி கூறு போட்டான். இந்நிலையில் திடீரென நாய் ஒன்று மனித கையுடன் தெருவில் சுற்றியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ  இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை மீட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நரேஷ் பிடிபட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.