
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போவை பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுவனை பெற்றோர் தேட துவங்கினர்.
அப்போது சிறுவன் காணாமல் போனதால் காவல் நிலையத்திற்கு விரைந்த பெற்றோர் தங்கள் மகனை காணவில்லை என்று புகார் அளித்தனர். சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் மோப்பநாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணி தொடங்கியது. லியோ என்ற மோப்பநாய் இந்த வழக்கில் ஈடுபடுத்தப்பட்டது.
முதலில் சிறுவனின் டி-ஷர்ட்டை மோப்பம் பிடித்த லியோ அவன் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. பின்னர் தேடுதல் வேட்டையில் இறங்கி சுமார் 3:30 மணி நேரத்தில் சிறுவனை கண்டுபிடித்தது. சில மணி நேரங்களிலேயே சிறுவன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.