பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர், உடற்பயிற்சி செய்வதற்காகத் தினமும் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஜிம்மிற்குச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் அவர், முதலில் படகு மூலமாகவும், அதன் பிறகு பேருந்திலும் எனப் பல மணி நேரம் சிரமப்பட்டு ஜிம்மிற்குச் செல்கிறார்.

வெறும் உடற்கட்டிற்காக மட்டும் இல்லாமல், அவரது அசாத்தியமான உழைப்பு மற்றும் விடாமுயற்சியைப் பார்த்து வியந்துபோன இணையவாசிகள், “உங்களுக்குத் தான் உண்மையான வெறி இருக்கு” என்று அவரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

“>

 

தூரத்தைக் காரணம் காட்டி உடற்பயிற்சியைத் தவிர்க்கும் பலருக்கு இந்த இளைஞர் ஒரு பெரிய முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.