இந்திய ரிசர்வ் வங்கி நேற்று மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பல அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி காசோலைகளை வங்கியில் டெபாசிட்டில் அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. பொதுவாக நமக்கு வரவேண்டிய பணம் காசோலையாக கிடைக்கும் போது அந்த பணம் கையில் கிடைக்க இரண்டு நாட்கள் ஆகும். காசோலையை வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பின்னர் அடுத்த நாள் மாலையில் தான் நமது வங்கி கணக்கு பணம் வரவு வைக்கப்படும்.

இதனால் கையில் காசு இருந்தும் அதனை உடனடியாக செலவு செய்ய முடியாத நிலையில் நாம் இருப்போம். இனி அந்த கவலை வேண்டாம். ஏனென்றால் காசோலையை டெபாசிட் செய்து அடுத்த சில மணி நேரங்களில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். CTS முறையின் கீழ் காசோலை பிரதி, MICR விவரம் ஆன்லைனில் பதிவேற்றப்படும். இதனால் காசோலைக்கு சில மணி நேரத்தில் பணம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.