பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் அமைந்துள்ள அய்யம்புள்ளி காவல் சோதனைச் சாவடியில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காரில் வந்தபோது அங்கிருந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது வாகனத்தில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த முதன்மைக் காவலர் அழகர்சாமி என்பவர், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மீண்டும் அவர்களிடமே கொடுப்பதற்காக ரூ.500 லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளார். இந்த லஞ்சப் பணப் பரிமாற்றத்தை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி, காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், முதன்மைக் காவலர் அழகர்சாமி சுற்றுலாப் பயணிகளிடம் லஞ்சம் வாங்கியது ஆதாரத்துடன் உறுதியானது. இதையடுத்து, காவல்துறையின் கண்ணியத்திற்குத் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட முதன்மைக் காவலர் அழகர்சாமியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள அய்யம்புள்ளி காவல் சோதனைச் சாவடியில், கேரள மாநில சுற்றுலாப் பயணிகளிடம் வெளிமாநில மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து, பின்னர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த பாட்டில்களை மீண்டும் கொடுத்த முதன்மைக் காவலர் அழகர்சாமி சஸ்பெண்ட்… pic.twitter.com/yToeYZznLb
— PttvOnlinenews (@PttvNewsX) June 13, 2026
