பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தாமரை. புதுக்கோட்டையை சேர்ந்த இவர் தெருக்கூத்து கலைஞராகவும் நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் நடித்துள்ளார். பிறகு பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவ்வாறு தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சம்பாதித்த இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். கிராமத்து உடையில் வலம் வந்து அனைவரையும் கவர்ந்த தாமரை தற்போது மாடர்ன் உடை அணிந்து தனது தோற்றத்தை அப்படியே மாற்றியுள்ளார். சமீபத்தில் விமான நிலையத்தில் தனது கணவருடன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் புஷ்பா 2 பாடல் ஒன்றுக்கு அவர் நடனம் ஆடியுள்ளார். அதனைப் பார்த்த நபர் ஒருவர், காசு இருந்தா காக்கா கூட கலராகும் என கடுப்பில் கலாய்த்துள்ளார்.