பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பிரிந்து விட்டார்கள். ஆனால் இவர்கள் எதற்காக பிரிகிறார்கள் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் தங்கள் குறித்து எந்த வித கருத்துகளையும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் பத்திரிக்கையாளர் உமாபதி youtube சேனல் ஒன்று அளித்த பேட்டியில், சைந்தவி போன்ற பெண்கள் எதற்கும் ஆக மாட்டாங்க. உங்கள் வளர்ச்சியை யூஸ் பண்ணி அவங்க வளந்துட்டு ஆரம்பத்தில் இருந்தே அவரை பிடிக்கவில்லை என்னோட வாழ்க்கை போச்சு சுதந்திரம் போச்சுன்னு சொல்லுவாங்க.

பிரபலமா இருப்பான் அதை பயன்படுத்தி வாழ்ந்து விட்டு கடசில சுதந்திரம் இல்லைன்னு சொல்ல வேண்டியது. சுதந்திரம் வேணும்னா உன் சொந்த காசை பயன்படுத்து. மத்தவங்க காசை பயன்படுத்தக்கூடாது. பிரபலங்களை திருமணம் செய்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு கடைசில கழட்டிவிட்டு போகிறார்கள். இவ்வளவு நாள் வாழ்ந்துட்டு அதற்காக சொத்து கொடுத்து இருப்பாங்க அது அவங்க விஷயம் ஆனால் வெளியே வந்த பிறகும் டார்ச்சர் கொடுக்குறாங்க என்று பேசி இருக்கிறார்.