இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் மருத்துவமனையில் பதுங்கி உள்ளதாகவும் பணய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளது.

தகவல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனையில் இருக்கும் அப்பாவி மக்களின் நிலைமை என்ன என்பது பற்றி விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் மருத்துவமனையின் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட இலக்குடன் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தங்களது போர் ஹமாஸ் அமைப்புடன் தானே தவிர பொதுமக்களுடன் அல்ல என்றும் இஸ்ரேல் ராணுவ தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.