
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் YSR தெலுங்கானா கட்சியின் தலைவருமான YS ஷர்மிளா ஜனவரி 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சர்மிளா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம் ஆந்திர மாநிலத்தில் ஷர்மிளாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் தலைமை உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.