
சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து அதிகாரிகள் மீண்டும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய காகங்கள் பறவை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து சவூதி தேசிய வனவிலங்கு மேம்பாட்டு மையத்தின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இந்திய காகங்கள் தற்போது சவுதி அரேபியாவின் தென்மேற்கு எல்லை பகுதியான ஜிசான் மற்றும் பராசன் தீவில் அதிகம் காணப்படுகிறது. சவுதி அரேபியாவில் இருந்த இந்திய காகங்களை ஒழிக்கும் பணி நடைபெற்ற வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.