பொதுவாக காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பலரும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிடப்பட்டாலும் பிரேசில் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் கடந்த ஆண்டு விட 20 சதவீதம் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் காபி கொட்டைகளின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் காபியின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த செய்தி காபி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.