ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுவனின் உயிரை ரசகுல்லா பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலத்தில் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும் போது. டிவி அல்லது மொபைல் பார்ப்பது.. அந்த காலத்தில் நம் முன்னோர்களா சாப்பிடும் போது; பேசகூடாது ,இப்படி உட்கார்ந்து இருக்க வேண்டும் , கையை கீழே ஊன்றி [உட்கார்ந்து) சாப்பிட கூடாது.. என பல வழிமுறைகள் சொல்லி கொடுத்தார்கள்.. காரணம் அனைவரும் அறிந்ததுதான். ஏன் ..? அதுபோல ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனை பயன்படுத்தியவாறு படுத்து கொண்டே ரசகுல்லா சாப்பிட்டு உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ரசகுல்லா சிறுவனின் தொண்டையில் சிக்கி உள்ளது.

அதனை எடுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் இழப்பால் பெற்றோர் கதறியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.