தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது இதற்கு மத்தியில் டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க தன்னுடைய மகளை தந்தை கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் காஞ்ச்வாலா பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய  விசாரணையில் அந்த பெண்ணை அவருடைய தந்தையே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அந்த பெண் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில் அவருடைய தந்தை தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படவே தன்னுடைய மகளை டாக்ஸியில் அழைத்து வந்த தந்தை கண்ணாடி அறுக்கும் உபகரணத்தை வைத்து மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். மேலும் தன்னுடைய மகளை டாக்சி டிரைவர் கொன்றதாகவும் நாடகமாடியுள்ளார். இதனை அடுத்து உண்மை தெரிய வந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.