கேரள மாநிலம் கொச்சியில் 14 வயது  சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவனுடைய தாயார் கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து கீழே குதித்து மிஹிர் என்ற சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். இந்த சிறுவனுக்கு 15 வயது ஆகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சிறுவனின் தாயார் ராஜ்னா பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது பள்ளியில் மற்றும் பள்ளி பேருந்தில் தன்னுடைய மகன் கொடூரமான ராகிங் கொடுமைக்கு ஆளாகியுள்ளதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார.

அவர்கள் இழிவான வார்த்தைகளால் திட்டியதை என் மகனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் மகனை அவர்கள் கடுமையான முறையில் அடித்து தாக்கியதோடு கழிப்பறை இருக்கையை நாக்கால் நக்கும் படி கட்டாயப்படுத்தி துன்புறுத்தியுள்ளனர். இதனால்தான் வேதனை தாங்காமல் என்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.