கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் செல்வம். இவருக்கு சொந்தமான இடத்தை சிலர் வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டு அச்சடித்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு கள்ள நோட்டு தயாரிக்கும் மிஷின், பிஸ்டல் ஏர்கன், வாக்கி டாக்கிகள் போன்றவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது விசிக நிர்வாகி செல்வம் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருமாவளவன் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்