
கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பலியானார்கள். தற்போது பலி எண்ணிக்கை மேலும் 37 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிம்பர் மற்றும் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.