தமிழக மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகளை மக்கள் இப்போது திட்டமிட தொடங்கியுள்ளார்கள் இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பட்டாசு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12 வரை பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்பதால் முன்னதாகவே தீபாவளி களை கட்ட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.