இன்று  சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா  நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  நான் எப்போது சுறுசுறுப்பாக இருக்க ஊக்கம் கொடுப்பவர்களே மாணவர்கள் தான். தமிழ்நாட்டுக்கு என்று தனி குணம் உண்டு என்பதை மாணவர்கள் அறிய வேண்டும். எண்ணங்களை அழுக்காக்கும் கருத்துகளை புறக்கணித்து, வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி மாணவர்கள் சமூகத்தை வழிநடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் நலனுக்கான பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 சிறுபான்மை நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சிறுபான்மை மாணவிகள் இடைநிற்றல் இன்றி கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது