தமிழகத்தில் கைத்தொழில் மற்றும் புதிய தொழிலை தொடங்குவதற்கு விருப்பமுள்ள பயனர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய தொழில் முனைவோர் நிறுவனம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிவகாசியில் உள்ள இந்திய பட்டயக் கணக்காளர் அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கும் முகாமாது நேற்று நடைபெற்றது.

இந்த கடன் வழங்கும் முகாம் மூலமாக 11 விண்ணப்பதாரர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 11.74 கோடியில் புதிய தொழில் தொடங்க விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழில் முனைவோர் நிறுவனம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுயதலில் தொடங்க இருக்கும் பயனாளிகளுக்கு 3.20 கோடியில் காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளது.