இந்தியாவில் பல மாநிலங்களில் பாலியல் கல்வி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாலியல் கல்வி குறித்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான கொள்கைகளை அரசு அனுப்ப வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் கல்வி நிறுவனங்களில் பாலியல் கல்வி அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது உள்ளதாகவும் தற்போது கல்வித் துறையில் பாலியல் ஆரோக்கியம் மற்றும் விரிவான கல்வி பற்றிய புரிதல் இல்லாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து ஆசிரியர்கள் பெரும்பாலும் வெட்கப்படுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் பாடப்பிரிவுகளை தவிர்த்து விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்  வைக்கப்பட்டுள்ளது.