விண்வெளி ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா இருந்து வரும் நிலையில் நிலவின் தென் துருவத்தை சந்திரயான் -3 விண்கலம் மூலம் ஆராய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்ததாக சூரியனை ஆராய ஆதித்யா எல் ஒன் விண்கலத்தை அனுப்பினர். சுமார் 115 நாட்களாக வெற்றிகரமாக பயணிக்கும் இந்த விண்கலம் தற்போது சவாலான கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி லெக்ராஞ்சியன் மையம் புள்ளியை அது எட்டும் பட்சத்தில் மேலும் ஒரு சரித்திரத்தை இந்தியா படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைவருமே மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.