தெலுங்கானாவில் கடந்த 10 வருடங்களாக புதிய ரேஷன் கார்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை . தற்போது மாநிலத்தில் மொத்தம் 89.98 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. புதிய ரேஷன் கார்டுகளுக்கு சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். புதிதாக அமைந்துள்ள ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து கலெக்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார் .

இந்த நிகழ்வில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளார். குறிப்பாக டிசம்பர் 28ஆம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் என்று சமூக வலைதளங்களில் போலியான படிவங்களும் பரவி வருகிறது. இதை வைத்து பலரும் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.